ADDED : மார் 13, 2026 04:25 AM
கரூர்: சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே சீவியம்பட்டியை சேர்ந்-தவர் சந்திரசேகர், 55. பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர். இவ-ருடன் ஆத்துார் அருகே அரசநத்தம் மேற்குகாட்டை சேர்ந்த அரவிந்த், 19, கிளீனராக வேலை பார்த்து வந்தார். சேலத்திலி-ருந்து, கரூர் அருகேயுள்ள ஆத்துாரில் உள்ள பெட்ரோலிய நிறுவ-னத்திற்கு நேற்று முன்தினம் வந்து கொண்டு இருந்தனர். புகழூர் அருகே செங்காட்டனுார் பிரிவு அருகே, கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியின் அடியில் சிக்கிய கிளீனர் அரவிந்த் பலத்த காயமடைந்தார்.
கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்-பட்டும் உயிரிழந்தார்.இது குறித்து, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
