/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிவு பொருட்கள் தரம் பிரிக்கும் இடத்தில் துாய்மைப்பணி 'விறுவிறு'
/
கழிவு பொருட்கள் தரம் பிரிக்கும் இடத்தில் துாய்மைப்பணி 'விறுவிறு'
கழிவு பொருட்கள் தரம் பிரிக்கும் இடத்தில் துாய்மைப்பணி 'விறுவிறு'
கழிவு பொருட்கள் தரம் பிரிக்கும் இடத்தில் துாய்மைப்பணி 'விறுவிறு'
ADDED : ஜூலை 18, 2025 01:49 AM
கிருஷ்ணராயபுரம், சிந்தலவாடி பஞ்.,ல் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் கழிவு பொருட்கள் தரம் பிரிக்கும் இடத்தில், துாய்மைப்பணி விறுவிறுப்பாக நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்., பகுதியில் குப்பை தரம்பிரிக்கும் இடம், கரூர்-திருச்சி பழைய நெடுஞ்சாலை அருகே உள்ளது. இந்த இடத்தில், பஞ்., வார்டு பகுதிகளில் இருந்து குப்பைகளை சேகரித்து கொண்டுவந்து தரம் பிரிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, திறந்த வெளியாகவே குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்பட்டு எரிக்கப்பட்டது.
இதனால், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி முடங்கியது. தற்போது, மீண்டும் பஞ்., நிர்வாகம் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி துவங்கியதால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களை துாய்மைப்படுத்தும் பணியில், துாய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.