ADDED : மார் 24, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் பஞ்சாயத்து பகுதியில், சாலையோர இடங்களில் தூய்மை பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம், மேட்டு மகாதானபுரம் வரை உள்ள, சாலையோர பகுதிகளில் அதிகமான செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் அடைந்தனர். இதையடுத்து, பஞ்சாயத்து சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, செடிகளை அகற்றி துாய்மை பணி நடந்தது.
