ADDED : நவ 26, 2026 01:18 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:
பழையஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை பகுதியில் துாய்மை பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் முதல் பழையஜெயங்கொண்டம் பஞ்சப்பட்டி வரை நெடுஞ்சாலை உள்ளது. இதன் வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. பழையஜெயங்கொண்டம், கண்ணமுத்தாம்பட்டி ஆகிய இரண்டு இடங்களில், சாலையோரத்தின் இரு புறங்களில் வளர்ந்த முள் செடிகளை சாலை பணியாளர்கள் அகற்றி, துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களை கொண்டு பணி நடந்தது. துாய்மை பணிகள் நடந்ததால், வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி
எளிதாக சென்று வந்தனர்.
