/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'வெப்ப அலையில் வேலை செய்ய துாய்மை பணியாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது'
/
'வெப்ப அலையில் வேலை செய்ய துாய்மை பணியாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது'
'வெப்ப அலையில் வேலை செய்ய துாய்மை பணியாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது'
'வெப்ப அலையில் வேலை செய்ய துாய்மை பணியாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது'
ADDED : ஏப் 28, 2024 03:52 AM
கரூர்: வெப்ப அலை வீசும் நேரத்தில், வேலை செய்ய துாய்மை பணியாளர்களை கட்டாயப்படுத்த கூடாது என, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் கரூர் மாவட்ட கிளை சார்பில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சி, எட்டு டவுன் பஞ்சாயத்து, 157 ஊராட்சிகளில், 5,000-க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், பெரும்பான்மையோர் பெண்களாக உள்ளனர். கரூர் மாநகராட்சியில் காலை, 6:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரையும், நகராட்சி, டவுன் பஞ்.,களில் காலை, 6:00 மணி முதல், 11:00 மணி வரையும், மீண்டும் மதியம், 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரையும், பஞ்சாயத்துகளில் காலை, 6:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை பணிபுரிந்து வருகின்றனர். கூடுதலாக ஒரு மணி நேரமோ அல்லது அதற்கு மேலாகவோ வேலை நேரம் நீட்டிக்கப்பட்டு, கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுகிறது.
தற்போது மதியம், 12:00 மணியிலிருந்து, 3:00 மணி வெப்ப அலை காரணமாக உடல்நிலை பாதிப்பு, உயிரிழப்பு ஏற்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நேரத்தில் எவ்வித கருணையும் காட்டப்படாமல், எங்களை வேலை செய்ய வற்புறுத்தப்பட்டு வருகின்றனர். கடும் மன உளைச்சலுக்கு ஆளாவது மட்டுமின்றி, உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகி வருகிறோம். கடும் வெப்பம் நேரத்தில், பணி செய்ய கட்டாயப்படுத்துவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

