ADDED : மே 28, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:லட்சுமணம்பட்டியில் தேங்கிய கழிவு குப்பை அகற்றப்பட்டது.கிருஷ்ணராயபுரம அடுத்த லட்சுமணம்பட்டி கிராமத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு பாம்பலம்மன் கோவில் திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதனால் அந்த பகுதியில் அதிகமான கழிவு குப்பை தேங்கியது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்தது. இந்நிலையில், பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்., சார்பில், தேங்கிய கழிவு குப்பைகளை சுகாதார பணியாளர்கள் கொண்டு துாய்மை பணி
நடந்தது.
