/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலநிலை மாற்ற பயிற்சி முகாம்
/
கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலநிலை மாற்ற பயிற்சி முகாம்
கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலநிலை மாற்ற பயிற்சி முகாம்
கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலநிலை மாற்ற பயிற்சி முகாம்
ADDED : ஏப் 27, 2025 04:52 AM
கரூர்: கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், கால-நிலை மாற்றம் மற்றும் சட்ட ரீதியான தாக்கங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப்பயிற்சி முகாம் நடந்தது.
மாவட்ட சட்ட பணிகள் ஆணைய செயலாளர் அனுராதா தலை-மைவகித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம், மரங்-களை வளர்ப்பதன் அவசியம், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகள், சட்ட ரீதியான நடவடிக்கைகள் சூறித்து பேசினார்.திருச்சி அரசு சட்டக்கல்லுாரி பேராசிரியர் ராஜா, காலநிலை மாற்-றத்தால் கரூர் மாவட்டத்தில் ஏற்படும் விளைவுகள், காலநிலை திறன்மிகு வாழ்வியல் முறைகள், காலநிலை மாற்றத்தால் ஏற்-படும் குற்றங்கள் அதிகரிப்பு குறித்து பேசினார்.
பின், தேசிய பசுமைப்படை மற்றும் தமிழ்நாடு மாசுக்-கட்டுப்பாடு வாரியம் சார்பில் துணிப்பைகள் வழங்கப்பட்டன. உதவி வனப்பாதுகாவலர் முருகன், வனச்சரக அலுவலர் முரளி-தரன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.