ரயில்வே ஸ்டேஷன்களில் மூடப்பட்ட கழிப்பறைகள்: பயணிகள் கடும் அவதி
ரயில்வே ஸ்டேஷன்களில் மூடப்பட்ட கழிப்பறைகள்: பயணிகள் கடும் அவதி
ADDED : ஆக 29, 2026 07:04 AM
கரூர்:திருச்சி,
சேலம், ஈரோடு மார்க்கங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில்,
கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிப்பட்டு
வருகின்றனர்.
கரூர் வழியாக திருச்சி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும்
சேலம் மார்க்கம் வழியாக நாள்தோறும், சிறப்பு ரயில்கள் சென்று
வருகின்றன. இதில், நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று
வருகின்றனர். ஆனால், பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள
கழிப்பறைகள் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனால், ரயில்வே ஸ்டேஷன்களில்
இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக,
சேலம், திருச்சி மற்றும் ஈரோடு மார்க்கங்களில் உள்ள ரயில்வே
ஸ்டேஷன்களில் உள்ள கழிப்பறைகள் எந்த நேரமும் மூடப்பட்ட நிலையிலேயே
உள்ளது. இதனால், ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை
ஏற்பட்டால், ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு சென்று, சாவியை கேட்டு வாங்கும் நிலை
உள்ளது.
எனவே, ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கழிப்பறைகளை, திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம்.
