சேவல் சூதாட்டம்; 4 பேர் கைது ரொக்கம், பைக்குகள் பறிமுதல்
சேவல் சூதாட்டம்; 4 பேர் கைது ரொக்கம், பைக்குகள் பறிமுதல்
ADDED : ஜன 10, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:' புன்செய்புளியம்பட்டி அருகே சேவல் சூதாட்-டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
புன்செய் புளியம்பட்டியை அடுத்த புங்கம்பள்ளி குளம் அருகே, சேவல் சூதாட்டம் நடப்பதாக புளியம்பட்டி போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று சோதனை மேற்கொண்டனர். இரண்டு சேவல் களுடன் பணம் வைத்து சூதாடிய, தொப்பம்பாளைம் நவீன்குமார், 27; நம்பியூர் கூடகரை லட்சுமணன், 27; வேமாண்டம்பாளையம் லோகநாதன், 67; பவானிசாகர் இலங்கை தமிழர் முகாம் ரவி, 47, என நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 50 ஆயிரம் ரூபாய், நான்கு பைக்குகள் மற்றும் இறந்த நிலையில் இரண்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்.
