/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.83.69 லட்சம் மதிப்பில் தேங்காய், கொப்பரை தேங்காய் வர்த்தகம்
/
ரூ.83.69 லட்சம் மதிப்பில் தேங்காய், கொப்பரை தேங்காய் வர்த்தகம்
ரூ.83.69 லட்சம் மதிப்பில் தேங்காய், கொப்பரை தேங்காய் வர்த்தகம்
ரூ.83.69 லட்சம் மதிப்பில் தேங்காய், கொப்பரை தேங்காய் வர்த்தகம்
ADDED : ஜூலை 16, 2025 01:52 AM
கரூர், சாலைபுதுார் ஒழுங்கு
முறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 83 லட்சத்து, 69 ஆயிரத்து, 609 ரூபாய்க்கு விற்பனையானது.கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் உள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று முன்தினம் தேங்காய் ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 20 ஆயிரத்து, 596 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 58.69 ரூபாய், அதிகபட்சமாக, 70.86 ரூபாய், சராசரியாக, 66.55 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 7,670 கிலோ தேங்காய்கள், நான்கு லட்சத்து, 96 ஆயிரத்து, 587 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல் கொப்பரை தேங்காய், 759 மூட்டை வரத்தானது. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 243.69 ரூபாய், அதிகபட்சமாக, 256.71, சராசரியாக, 253.71, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 168.89, அதிகபட்சமாக, 244.71, சராசரியாக, 233.71 ரூபாய்க்கு ஏலம் போனது. 33,292 கிலோ கொப்பரை தேங்காய், 78 லட்சத்து, 73 ஆயிரத்து 22 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 83 லட்சத்து, 69 ஆயிரத்து, 609 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.