/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் தேங்காய் விலை உயர்வு
/
கிருஷ்ணராயபுரத்தில் தேங்காய் விலை உயர்வு
ADDED : அக் 24, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரத்தில்
தேங்காய் விலை உயர்வு
கிருஷ்ணராயபுரம், அக். 24-
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகாதானபுரம், சிந்தலவாடி, மாயனுார், கட்டளை, பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, கருப்பத்துார், மகிளிப்பட்டி ஆகிய இடங்களில் தென்னை மரம் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதால், விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் முதல் ஒரு தேங்காய், 20 முதல், 30 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தேங்காய் விலை மேலும் உயர்ந்து விற்கப்படும் என விவசாயிகள் கூறினர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.