ADDED : ஜூலை 17, 2026 06:08 AM
அ நிறம் | அளவு
கரூர்:நொய்யல்
அருகே மறவாபாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 50. இவரது தோட்டத்தில்
உள்ள தென்னை மரங்கள், தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அருகில்
இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் காற்றின்
காரணமாக, தீ வேகமாக எரிய தொடங்கியது.
பின்னர் வந்த புகழூர்
தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள், தென்னை
மரங்களில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை, போராடி அணைத்தனர்.
அருகாமையில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.
இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
