/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.8.61 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
/
ரூ.8.61 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
ADDED : டிச 27, 2024 07:30 AM
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. இங்கு, உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். கடந்த வாரம், நடந்த ஏலத்திற்கு, 4,144 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சம் கிலோ, 142.69 ரூபாய், குறைந்த பட்சம், 127.89 ரூபாய், சராசரி, 139.66 ரூபாய் என, மொத்தம், 5.26 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது.
இதேபோல், நேற்று நடந்த தேசிய வேளாண்மை சந்தையில், 6,475 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், அதிகபட்சம் கிலோ, 146.67 ரூபாய், குறைந்தபட்சம், 133.89 ரூபாய், சராசரி, 145.10 ரூபாய் என, மொத்தம், 8.61 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

