/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.37.35 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை ஏலம்
/
ரூ.37.35 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை ஏலம்
ADDED : பிப் 11, 2026 07:19 AM
கரூர்: சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 37 லட்சத்து, 35,638 ரூபாய்க்கு விற்பனையானது.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம், நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 17,233 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஒரு கிலோ குறைந்தபட்சம், 42.39 ரூபாய், அதிகபட்சம், 59.69 ரூபாய், சராசரி, 58.89 ரூபாய் என, மொத்தம், 4,923 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 2 லட்சத்து, 77,045 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல், 430 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம், ஒரு கிலோ குறைந்தபட்சம், 184.69 ரூபாய், அதிகபட்சம், 200.39 ரூபாய், சராசரி, 199.39 ரூபாய், இரண்டாம் தரம், 134.89 ரூபாய், அதிகபட்சம், 186.89 ரூபாய், சராசரி, 174.89 ரூபாய் என, 19,499 கிலோ கொப்பரை தேங்காய், 34 லட்சத்து, 58,593 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 37 லட்சத்து, 35,638 ரூபாய்க்கு விற்பனையானது.

