தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/இடிந்து விழும் நிலையில் மேல் நிலை குடிநீர் தொட்டி

இடிந்து விழும் நிலையில் மேல் நிலை குடிநீர் தொட்டி

இடிந்து விழும் நிலையில் மேல் நிலை குடிநீர் தொட்டி


ADDED : மார் 18, 2024 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2024 03:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர்-திருச்சி சாலை மூலகாட்டனுாரில், 2006-07 ல் சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்தாக இருந்த போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதன் மூலம், மூலகாட்டனுார் பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்து கடந்த, 2011 ல் கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட் டது. அதற்கு பிறகு, மேல் நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்தது. துாண்களில் உள்ள, கான்கீரிட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு, மேல்நிலை குடிநீர் தொட்டி மோசமாக உள்ளது.

கரூரில் இருந்து திருச்சிக்கு மூலகாட்டனுார் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எந்நேரமும் இடிந்து விழும் நிலையில், பிரதான சாலையோரம் உள்ள, மேல்நிலை குடிநீர் தொட்டியால் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே, சேதம் அடைந்த குடிநீர் தொட்டியை உடனடியாக, அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us