'ஹங் டேலண்ட் ஹன்ட்' நிகழ்ச்சி கலெக்டர் தொடங்கி வைப்பு
'ஹங் டேலண்ட் ஹன்ட்' நிகழ்ச்சி கலெக்டர் தொடங்கி வைப்பு
ADDED : ஜூலை 05, 2026 05:09 AM

கரூர்:கரூர்
மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 'ஹங் டேலண்ட் ஹன்ட்' நிகழ்ச்சி
நடந்தது. இதனை, கலெக்டர் முத்துக்குமரன் தொடங்கி வைத்து
கூறியதாவது:
14 வயதிற்கு குறைந்த மற்றும் 17 வயதிற்கு குறைந்த என,
இரண்டு பிரிவின் கீழ் விளையாட்டு வீரர்களை பங்குபெற செய்து மாவட்ட
விளையாட்டு அலுவலகம் மூலம், 100 மீ., 200 மீ., 400 மீ., மற்றும் 800
மீ., ஆகிய தடகள போட்டிகளை நடத்தி, சிறந்த விளையாட்டு வீரர்களை
கண்டறிந்து, அவர்களுக்கு மேலும் சிறந்த முறையில் பயிற்சிகள்
வழங்குவதே, 'ஹங் டேலண்ட் ஹன்ட்' நோக்கம் ஆகும்.
இதன் மூலம் என்னற்ற
இளைஞர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களாகவும், மத்திய, மாநில அரசு
வேலைவாய்ப்பில் சேர வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தை சார்ந்த, 166 ஆண்கள்
மற்றும் 124 பெண்கள் என, மொத்தம், 290 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் டேனியல் டேவிட் உள்பட பலர் பங்கேற்றனர்.
