/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
/
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 10, 2025 01:07 AM
கரூர் குளித்தலை ஊராட்சி ஒன்றியம், இனுங்கூரில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை, கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.பின், அவர் கூறியதாவது:
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள், தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அந்த வகையில், கரூர் மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2023-24ம் ஆண்டில் 14 பணிகள் ரூ.1.49 கோடி மதிப்பீட்டிலும், 19 பணிகள், 1.57 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம், 33 பணிகள், 3.06 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்றுள்ளது. 18 பணிகள், 1.97 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.இவ்வாறு கூறினார்.
ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், சுந்தரபாண்டியன் உள்பட பலர் உடனிருந்தனர்.