ADDED : செப் 24, 2026 06:55 AM
கிருஷ்ணராயபுரம்:கரூர்
மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில், புதிய வளர்ச்சி திட்டப் பணிகள்
மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து, கலெக்டர்
முத்துக்குமரன் ஆய்வு மேற்கொண்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை
உறுதி திட்டத்தின் கீழ் புதுக்குளத்தில், 2.25 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில், 300 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டுள்ளது.
வரவணையில், 2.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்வட்ச் பாரத் மிஷன்
திட்டத்தின் மூலம், அமைக்கப்பட்டு வரும் மலக்கழிவு சேறு
சுத்திகரிப்பு நிலையத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.
குடிநீர், சாலை,
சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, வேளாண் அடிப்படை வசதிகள் தொடர்பான
பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொண்டு, அரசின் நலத்திட்ட
பயன்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யுமாறு
தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது குளித்தலை சப்-கலெக்டர் சேஷத்ரிமயும் தீபு சானு உள்பட பலர் பங்கேற்றனர்.
