/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இணைப்பு சக்கரத்தை கழற்றி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர்: கலெக்டர் எச்சரிக்கை

ADDED : ஜூன் 13, 2025 01:42 AM
கரூர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட, ஸ்கூட்டர்களின் இணைப்பு சக்கரத்தை கழற்றி பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன
. இத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஸ்கூட்டர் பெற்றவர்கள் மற்றும் இனி வரும் காலங்களில் ஸ்கூட்டர் பெறுபவர்கள் என அனைவரும், அரசு வழங்கும் வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளை தவிர மற்றவர்கள் பயன்படுத்துவது மற்றும் வாகனத்தின் இணைப்பு சக்கரங்களை கழற்றிவிட்டு பயன்படுத்துவது குற்ற செயலாகும். மாற்றுத்திறனாளிகள் தவிர, மற்றவர்கள் வாகனத்தை பயன்படுத்துவது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுத்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.