sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கலெக்டர் அலுவலக 'லிப்ட்' பழுது 6 பேர் சிக்கி கொண்டதால் பரபரப்பு

/

கலெக்டர் அலுவலக 'லிப்ட்' பழுது 6 பேர் சிக்கி கொண்டதால் பரபரப்பு

கலெக்டர் அலுவலக 'லிப்ட்' பழுது 6 பேர் சிக்கி கொண்டதால் பரபரப்பு

கலெக்டர் அலுவலக 'லிப்ட்' பழுது 6 பேர் சிக்கி கொண்டதால் பரபரப்பு


ADDED : மார் 29, 2024 01:00 AM

Google News

ADDED : மார் 29, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் கலெக்டர் அலுவலக, 'லிப்ட்' பழுதாகி பாதியில் நின்றது, அதில், 6 பேர் சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தேர்தல் வேட்பு மனு பரிசீலனை, நேற்று நடந்தது. இதில், அரசு அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என பல்வேறு தரப்பினர் பணியாற்றினர். அதில், மதியம், 2:30 மணிக்கு முதல் மாடியில் இருந்து கீழே வந்த, 'லிப்ட்' திடீரென பழுதாகி பாதியில் நின்றது. அதில், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என, 6 பேர் மாட்டிக் கொண்டனர்.

பின், 'லிப்ட்' பழுது பார்க்கும் பொறியாளர் சாவியை கொண்டு வந்து திறந்து பத்திரமாக அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை மீட்டார். கடந்தாண்டு அதே, 'லிப்ட்' பழுதாகி, 5 பேர் மாட்டிக் கொண்டனர். பின், தீயணைப்பு துறையினர், 'லிப்டி'ன் கதவை திறந்து மீட்டனர். இங்கு, அடிக்கடி, 'லிப்ட்' பழுதடைந்து வரும் நிலையில், புதிய, 'லிப்ட்' மற்ற வேண்டும் என, அதிகாரிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.






      Dinamalar
      Follow us