sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணவாசியில் வேளாண் கல்லுாரி; பதிவாளரிடம் நிலம் ஒப்ப-டைப்பு

/

மணவாசியில் வேளாண் கல்லுாரி; பதிவாளரிடம் நிலம் ஒப்ப-டைப்பு

மணவாசியில் வேளாண் கல்லுாரி; பதிவாளரிடம் நிலம் ஒப்ப-டைப்பு

மணவாசியில் வேளாண் கல்லுாரி; பதிவாளரிடம் நிலம் ஒப்ப-டைப்பு


ADDED : நவ 09, 2024 04:02 AM

Google News

ADDED : நவ 09, 2024 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, மணவாசியில் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு, 40 ஏக்கர் கோவில் நிலத்தை ஒப்படைப்பதற்கான சான்றிதழை, வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளரிடம் சப் - கலெக்டர் வழங்கினார்.

கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். கல்லுாரி அமைவ-தற்கான போதிய நிலம், இடவசதி இல்லாததால் கரூர் பசுபதீஸ்-வரர் கோவில் அருகில் உள்ள சமுதாய கூடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் குளித்தலை அடுத்த, மணவாசி பஞ்., கோர-குத்தி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறைகட்டுப்-பாட்டில் இருந்து வரும், மத்தியபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்த-மான, 40 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்-ளது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமையவுள்ள மத்திய புரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 40 ஏக்கர் நிலத்தை நேற்று குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தனிடம் சப்--கலெக்டர் சுவாதி ஸ்ரீ ஒப்புகை சான்றிதழ் வழங்கினார்.

வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மைய முதன்மை அலு-வலர் பாலசுப்ரமணியன், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகுடேஷ்வரன், கல்லுாரி உதவி பேராசிரியர் கோபி, மணவாசி பஞ்., தலைவர் சிவா, விவசாயிகள் ராஜாராம், கட்டளை ராஜா, சுப்புராம் மற்றும் கல்லுாரி அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us