/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டிராக்டர்-மொபட் மோதி கல்லுாரி மாணவர் பலி
/
டிராக்டர்-மொபட் மோதி கல்லுாரி மாணவர் பலி
ADDED : அக் 02, 2025 01:33 AM
ப.வேலுார்:ஜேடர்பாளையம் அருகே, பாகம்பாளையத்தை சேர்ந்தவர் கோபால
கிருஷ்ணன் மகன் தீபக், 18; பி.எஸ்சி., முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மதியம், 'டி.வி.எஸ்., 50' மொபட்டில், தீபக் மற்றும் இவரது நண்பர் ரோஹித் ஆகிய இருவரும், ஜேடர்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கண்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் மீது நேருக்கு நேர் மோதியதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில், தீபக் ஹெல்மெட் அணியாததால், தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ரோஹித், நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து, ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி
விட்டு தலைமறைவான வடகரையாத்துரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் கதிரேசனை தேடி வருகின்றனர்.