தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த கல்லுாரி மாணவர் பலி

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த கல்லுாரி மாணவர் பலி

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த கல்லுாரி மாணவர் பலி


ADDED : மார் 10, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் அருகே, பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.

சின்னதாராபுரம் அருகே தும்பிவாடி அடுத்த சேங்கலாபுரத்தை சேர்ந்த மணி என்பவரின் மகன் சுரேந்தர், 20. சுரேந்தரின் தாய் மற்றும் தந்தை இருவரும் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், அவர் தனது உறவினரான முருகேசன் வீட்டில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்தார். இவர் கரூரில் உள்ள தனியார் கல்லுா-ரியில், பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில், சுரேந்தர் சேங்கலாபுரம் பகுதியில் உள்ள ஒரு பனை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது, கீழே விழுந்ததில் அவ-ருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்-றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சுரேந்தர் ஏற்-கனவே உயிரிழந்துவிட்டதாக

கூறினர்.

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்-பட்டது. இறந்த சுரேந்தரின் உறவினரான முருகேசன் அளித்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us