/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஸ்கூட்டி மீது கார் மோதல் கல்லுாரி மாணவி இறப்பு
/
ஸ்கூட்டி மீது கார் மோதல் கல்லுாரி மாணவி இறப்பு
ADDED : நவ 03, 2024 12:53 AM
ஸ்கூட்டி மீது கார் மோதல்
கல்லுாரி மாணவி இறப்பு
அரூர், நவ. 3-
அரூர் திரு.வி.க., நகரை சேர்ந்தவர் அப்துல் சுபான், 19. இவர், நாமக்கல் தனியார் கல்லுாரியில் பி.பார்ம்., இரண்டாமாண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு கே.வேட்ரப்பட்டியை சேர்ந்த தற்போது, நம்பிப்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த வந்த தனியார் கல்லுாரியில் பி.டெக்., இரண்டாமாண்டு படித்த இனியா, 18, என்பவரை அவரது வீட்டில் விட்டு வர, தன் டி.வி.எஸ்., ஜூபிடர் ஸ்கூட்டியில் பின்னால் உட்கார வைத்து சென்றார்.
அரூர் - சேலம் சாலையில், நம்பிப்பட்டி அருகே வலது பக்கம் திரும்பும்போது பின்னால் வந்த டொயோட்டா கார், ஸ்கூட்டி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அப்துல் சுபான் மற்றும் இனியாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு இனியாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். புகார்படி கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.