/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரியாற்று நீரில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி
/
காவிரியாற்று நீரில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஏப் 19, 2025 02:23 AM
கரூர்:
வேலாயுதம்பாளையம் அருகே, காவிரியாற்று நீரில் மூழ்கி, கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், கணபதி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் ஸ்ரீஹரி ராம், 19; இவர், நேற்று மாலை, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே, நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவுக்காக, நண்பர் தீபக் என்பவரது வீட்டுக்கு சென்றார். பிறகு, நண்பர்
களுடன் மறவாப்பாளையம் பகுதியில் உள்ள காவிரியாற்றில் ஸ்ரீஹரி ராம் குளிக்க சென்றார். ஆனால், நீரில் மூழ்கிய அவர் உயிரிழந்தார்.
வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள், காவிரியாற்றில் இறங்கி, ஸ்ரீஹரி ராம் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இறந்த மாணவர் கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

