ADDED : மார் 13, 2024 02:07 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த, அய்யர்மலை வார்ட் போக்கி நகரை சேர்ந்தவர் கோபால், 43,
முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் மாதேஷ், 19, குளித்தலை அரசு கலைக்
கல்லுாரியில் பி.எஸ்சி., படித்து வருகிறார்.
கடந்த, 7ல் மாலை, 4:00
மணியளவில் அய்யர்மலை பகுதியில், வியாபாரம் சம்பந்தமாக கடை
போடுவதற்காக தாய், தந்தை இருவரும் சென்று விட்டு, மாலையில் வீடு
திரும்பி உள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்த மகன் மாதே ைஷ
காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த விதமான
தகவலும் கிடைக்கவில்லை.
தனது மகனை காணவில்லை என, முன்னாள் ராணுவ
வீரர் கோபால் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு
செய்து தேடி வருகின்றனர்.
