/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
/
ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
ADDED : ஏப் 29, 2025 01:48 AM
குளித்தலை:
குளித்தலை அடுத்த, தோகைமலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தோகைமலை வட்டார கிளை சார்பாக, ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
வட்டார தலைவர் வனலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் உண்ணாமலை, முன்னாள் மாவட்ட தலைவர் காளிதாஸ், முன்னாள் வட்டார செயலாளர் பாலமுருகன், கரூர் நகர செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்டார செயலாளர் ரஞ்சித்குமார்  வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, தோகைமலை வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமி உள்பட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். பணி ஓய்வு பெறும் புத்துார் பஞ்., எ.நடுப்பட்டி  நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த, இடைநிலை ஆசிரியர் திருமலையாச்சியாரை பாராட்டி நினைவு பரிசு, கேடயம் வழங்கினர்.

