ADDED : நவ 29, 2026 07:20 AM
கரூர்:கரூர்
மாவட்ட கம்யூ., கட்சிகள் சார்பில், மனோகரா கார்னர் காமராஜர் சிலை
அருகே, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மதுரை மாவட்டம்,
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில், விளக்கேற்றியதை கண்டித்தும்,
தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க கோரியும் கோஷங்கள்
எழுப்பப்பட்டது.
பின், காமராஜர் சிலையில் இருந்து, ஜவஹர் பஜார்
வழியாக, தலைமை தபால் நிலையம் வரை பேரணியாக செல்ல முயன்ற, கம்யூ.,
கட்சியினரை, அனுமதி இல்லை எனக்கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால், கம்யூ., கட்சியினர் பேரணி செல்லாமல் திரும்பி சென்றனர்.ஆர்ப்பாட்டத்தில்,
மாவட்ட மா.கம்யூ., கட்சி செயலாளர் ஜோதிபாசு, இ.கம்யூ., செயலாளர்
கலாராணி, தொழிற்சங்க நிர்வாகிகள் ஜீவானந்தம், வடிவேலன், கரூர்
மாநகராட்சி கவுன்சிலர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.
