/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டணம் இல்லா பஸ்களை நிறுத்துவது இல்லை என புகார்
/
கட்டணம் இல்லா பஸ்களை நிறுத்துவது இல்லை என புகார்
ADDED : ஜூன் 10, 2024 01:50 AM
கரூர்: கரூர் அருகே, கட்டணம் இல்லாத அரசு டவுன் பஸ்களில் பெண்களை, ஏற்றி செல்வது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
கடந்த, 2021 மே மாதம், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், மாநிலம் முழுதும் அரசு டவுன் பஸ்களில், பெண்கள் பயணம் செய்ய கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டது. அதற்காக, இலவச பஸ் டிக்கெட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கரூரில் இருந்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாருக்கு செல்லும் அரசு டவுன் பஸ்களிலும், பரமத்தி வேலுாரில் இருந்து ஈரோடு மாவட்டம், கொடுமுடி வரை செல்லும் அரசு டவுன் பஸ்களிலும், வேலைக்காக பெண்கள் சென்று வருகின்றனர்.
ஆனால், குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்புகளில் குறைந்தளவில் பெண்கள் நின்றால், டவுன் பஸ்களை டிரைவர்கள் நிறுத்தாமல் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால், குறிப்பிட்ட நேரத்தில், பெண்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே, அனைத்து பஸ் ஸ்டாப்புகளிலும் அரசு டவுன் பஸ்களை நிறுத்தி, பெண்களை அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.