/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிரேமலதா குறித்து அவதுாறு தி.மு.க., அனுதாபி மீது புகார்
/
பிரேமலதா குறித்து அவதுாறு தி.மு.க., அனுதாபி மீது புகார்
பிரேமலதா குறித்து அவதுாறு தி.மு.க., அனுதாபி மீது புகார்
பிரேமலதா குறித்து அவதுாறு தி.மு.க., அனுதாபி மீது புகார்
ADDED : நவ 25, 2025 01:09 AM
கரூர், கரூர் மாநகர் மாவட்ட தே.மு.தி.க., பொருளாளர் கார்த்திகேயன் உள்பட அக்கட்சியினர், நேற்று கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கரூர், அரசு காலனி வசந்தம் நகரை சேர்ந்த பாலாஜி என்பவரது மனைவி அனிதா, தி.மு.க., அனுதாபி. இவர், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா குறித்து, அவதுாறு கருத்துகளை பேசி, இரண்டு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், தி.மு.க.,வை எதிர்த்தால் விளைவு பயங்கரமாக இருக்கும் எனவும், கரூர் வி.எஸ்.பி., படை (தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி) சும்மா விடாது எனவும் பேசியுள்ளார். எனவே, அனிதா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.