sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'டி.என்.அலர்ட்' மொபைல் செயலியில் மழைநீர் தொடர்பாக புகார் அளிக்கலாம்

/

'டி.என்.அலர்ட்' மொபைல் செயலியில் மழைநீர் தொடர்பாக புகார் அளிக்கலாம்

'டி.என்.அலர்ட்' மொபைல் செயலியில் மழைநீர் தொடர்பாக புகார் அளிக்கலாம்

'டி.என்.அலர்ட்' மொபைல் செயலியில் மழைநீர் தொடர்பாக புகார் அளிக்கலாம்


ADDED : அக் 15, 2024 03:02 AM

Google News

ADDED : அக் 15, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'டி.என்.அலர்ட்' மொபைல் செயலியில்

மழைநீர் தொடர்பாக புகார் அளிக்கலாம்

கரூர், அக். 15--

'டி.என்.அலர்ட்' என்ற மொபைல் செயலியில் மழைநீர் தொடர்பாக புகார் அளிக்கலாம்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 1077, 04324 -256306 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட, 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும், வட்ட வாரியாக கண்காணிப்புக் குழுக்கள், மண்டலக்குழுக்கள் அமைக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏதுவாக, 79 நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.

மழைகாலங்களில் மழைநீரானது தேங்காத வண்ணம் செல்ல ஏதுவாக மழைநீர் வடிகால்கள் வசதி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மழைகாலங்களில் மழைநீர் தேங்குவதற்கு ஏதுவாக குளம், குட்டைகளை துார் வாரியும், அவற்றின் கரைகளை பலப்படுத்திடவும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு, 'டி.என்.அலர்ட்' என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தின் வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்து கொள்ளலாம். பொது மக்கள் தங்களது பகுதியில் மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்த புகார்களை இந்த செயலியின் தெரிவிக்கலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us