பாய்லரில் ஏற்பட்ட தீயை அணைத்த கண்டக்டருக்கு உடல்நலக்குறைவு
பாய்லரில் ஏற்பட்ட தீயை அணைத்த கண்டக்டருக்கு உடல்நலக்குறைவு
ADDED : ஜூலை 07, 2026 05:29 AM
அ நிறம் | அளவு
கரூர்; கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில், டீக்கடை பாய்-லரில் ஏற்பட்ட தீயை அணைத்த, அரசு பஸ் கண்-டக்டருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட து.
கரூரை சேர்ந்தவர் பார்த்திபன், 43; அரசு பஸ் கண்டக்டர். இவர், நேற்று மாலை கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில், ஆனந்த் டீ கடை யில் நின்று கொண்டிருந்தார். அப்போது, டீ தயாரிக்கும் பாய்-லரில் இருந்து புகையுடன் கூடிய தீ வெளியா-னது. இதையடுத்து, புதிய பஸ் ஸ்டாண்டில் மாட் டப்-பட்டிருந்த தீ அணைப்பானை எடுத்து, பாய்லரில் ஏற்பட்ட தீயை அணைத்தார். அப்போது, தீ அணைப்பானில் இருந்து வெளியேறிய வெள்ளை நிற காஸ் காரணமாக, பார்த்திபனுக்கு தொண்-டையில் எரிச்சல் மற்றும் வலி
ஏற்பட்டது.
இதனால், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்-துவமனைக்கு சென்று, பார்த்திபன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
