/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.35 குறைந்ததால் 'சஸ்பெண்ட்' கோபுரத்தில் ஏறி கண்டக்டர் தர்ணா
/
ரூ.35 குறைந்ததால் 'சஸ்பெண்ட்' கோபுரத்தில் ஏறி கண்டக்டர் தர்ணா
ரூ.35 குறைந்ததால் 'சஸ்பெண்ட்' கோபுரத்தில் ஏறி கண்டக்டர் தர்ணா
ரூ.35 குறைந்ததால் 'சஸ்பெண்ட்' கோபுரத்தில் ஏறி கண்டக்டர் தர்ணா
ADDED : ஆக 01, 2025 09:55 PM
கரூர்:கரூர் அருகே, 'சஸ்பெண்ட்' உத்தரவை ரத்து செய்யக்கோரி, கண் காணிப்பு கோபுரத்தில் ஏறி, அரசு பஸ் கண்டக்டர் தர்ணாவில் ஈடுபட்டார்.
கரூ ர் மாவட்டம், உப்பிடமங்கலம் வடக்கு கேட் பகு தியைச் சேர்ந்தவர் பழனி சாமி, 56; அரசு பஸ் கண்டக்டர். இவர், கரூர் கிளை இர ண்டில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர் பணியில் இருந்த போது, இரு மாதங்களுக்கு முன், டிக்கெட் பரிசோதனை ஆய்வாளர்கள் பஸ்சில் ஆய்வு செய்தனர்.
அப்போது, டிக்கெட் மதிப்பை காட்டிலும் 35 ரூபாய் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பின், அவர் கொடுத்த விளக்கத்தை ஏற்று, கரூர் மண்டல போக்குவரத்து கழகம், உரிய பதில் தரவில்லை என தெரிகிறது.
இதனால் விரக்தியில் இருந்த பழனிசாமி, நேற்று காலை 8:30 மணிக்கு கரூர் அருகே திருமாநிலையூரில் உள்ள மண்டல போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றார்.
அங்குள் ள கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி தர்ணா செய்தார். தகவலறிந்த மண்டல துணை மேலாளர் சு ரேஷ், பசுபதிபாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், 'சஸ்பெண்ட் உத்தரவு குறித்து பேசி, சரி செய்து கொள்ளலாம்; முதலில், கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து இறங்குங்கள்' என அவரிடம் கூறினர்.
இதையடுத்து, கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து இறங்கினார்.
அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என, கரூர் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள், அவரிடம் தெரிவித்தனர்.
இதனால், திருமாநிலையூர் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில், ஒன்றரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

