/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இந்திய கம்யூ., கட்சி சார்பில் மாநாடு பேரணி
/
இந்திய கம்யூ., கட்சி சார்பில் மாநாடு பேரணி
ADDED : ஜூன் 18, 2025 02:31 AM
கரூர்,கரூர் மாவட்ட இந்திய கம்யூ., கட்சி சார்பில், 10வது மாநாட்டையொட்டி, நேற்று பேரணி நடந்தது.
கரூர் மனோகரா கார்னர் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியை, மாவட்ட இ.கம்யூ., கட்சி செயலாளர் நாட்ராயன் தொடங்கி வைத்தார். திருச்சி சாலை வழியாக பேரணி, உழவர் சந்தை திடலை அடைந்தது. பிறகு, பொதுக்கூட்டம் நடந்தது. அதில், மாவட்ட துணை செயலாளர்கள் மோகன் குமார், சண்முகம், பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் வடிவேலன், கலாராணி உள்பட பலர் பங்கேற்றனர்.
இன்று காலை, 10:00 மணிக்கு காவிரி திருமண மண்டபத்தில், 10 மாவட்ட மாநாடு மற்றும் பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. திருப்பூர் எம்.பி., சுப்பராயன், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட குழு உறுப்பினர் ரத்தினம், நகர செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.