/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் இருந்து வெளியூர்களுக்கு மக்கள் சென்றதால் கூட்ட நெரிசல்
/
கரூரில் இருந்து வெளியூர்களுக்கு மக்கள் சென்றதால் கூட்ட நெரிசல்
கரூரில் இருந்து வெளியூர்களுக்கு மக்கள் சென்றதால் கூட்ட நெரிசல்
கரூரில் இருந்து வெளியூர்களுக்கு மக்கள் சென்றதால் கூட்ட நெரிசல்
ADDED : ஜன 18, 2024 12:43 PM
கரூர்,: பொங்கல் விடுமுறை முடிந்து, வெளியூர்களுக்கு பொதுமக்கள் சென்றதால், கரூர் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் அலைமோதியது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர், தொழில் மற்றும் பல்வேறு காரணங்களால் வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலை பார்த்த பலர், கரூர் மாவட்டத்திற்கு கடந்த, 13ல் இருந்து வர தொடங்கினர். பொங்கல் பண்டிகை தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் உற்சமாக கொண்டாடினர்.
விடுமுறை முடிந்த நிலையில், தாங்கள் வேலை பார்க்கும் இடங்களுக்கு செல்ல நேற்று ஆயத்தமாகினர். இதற்காக கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், அவ்வபோது போக்குவரத்து அதிகாரிகள் எந்தெந்த பஸ்கள் எங்கு செல்கிறது என, அறிவுறுத்தியபடி இருந்தனர்.
கரூர் ரயில்வே ஸ்டேஷனில், வழக்கத்தை விட நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கரூரில் இருந்து மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.