/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற இரண்டு மாணவியருக்கு பாராட்டு
/
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற இரண்டு மாணவியருக்கு பாராட்டு
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற இரண்டு மாணவியருக்கு பாராட்டு
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற இரண்டு மாணவியருக்கு பாராட்டு
ADDED : ஏப் 24, 2025 01:28 AM
கரூர்:கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், ஆச்சிமங்கலம் நடுநிலைப்பள்ளியில், தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.வட்டார கல்வி அலுவலர் சகுந்தலா தலைமை வகித்தார். நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை கைவிட்டு, உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கில், மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) நடத்தி வருகிறது. இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டமாக, அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம், 1,000 ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
அதன்படி, 2024-25ம் கல்வியாண்டுக்கான தேர்வு கடந்த பிப்.,28ல் நடந்தது. இதில் மாணவி கவுசல்யா, ஷர்மதா ஆகிய இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களை பாராட்டி கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் கவுரி, பள்ளி தலைமை ஆசிரியர் அம்மையக்காள், வளமைய மேற்பார்வையாளர் செல்வகுமார், பயிற்றுனர் பாண்டீஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

