/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காங்., எம்.பி., ராகுல் பிறந்த நாள் விழா
/
காங்., எம்.பி., ராகுல் பிறந்த நாள் விழா
ADDED : ஜூன் 20, 2024 07:13 AM
கரூர் : கரூர் மாவட்ட ஐ.என்.டி.யு.சி., சார்பில், காங்., எம்.பி., ராகுல் பிறந்த நாள் விழா, பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது.அகில இந்திய கிசான் காங்., கட்சி ஒருங்கிணைப்பாளர் பாங்க் சுப்பிரமணியன், கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மாவட்ட ஐ.என்.டி.யு.சி., தலைவர் பழனிசாமி, காங்., கட்சி நிர்வாகிகள் நாகேஷ்வரன், சின்னையன், சந்தன குமார், சுந்தரலிங்கம், முன்னாள் கவுன்சிலர் சுப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.* கரூர் வெங்கமேட்டில், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன் பாபு தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின், கட்சி கொடி ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். கரூர் மாநகர் தலைவர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.