/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மன்மோகன் சிங் படத்துக்கு காங்., கட்சியினர் அஞ்சலி
/
மன்மோகன் சிங் படத்துக்கு காங்., கட்சியினர் அஞ்சலி
ADDED : டிச 28, 2024 01:59 AM
கரூர்: கரூர் மாவட்ட காங்., கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் மன்-மோகன் சிங் மறைவுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த, 2004-14 வரை தொடர்ச்சியாக, 10 ஆண்டுகள் காங்., கட்சி சார்பில் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங், 92; இவர், நேற்று முன்தினம் இரவு, புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்து-வமனையில், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் நாடு முழுவதும், ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மத்-திய, மாநில அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரூர் மாவட்ட காங்., கட்சி சார்பில், மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில், அக்கட்சியினர் நேற்று காலை, கரூர் மனோகரா கார்னர் பகுதியில், வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உருவப்படத்துக்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, நகர காங்., தலைவர் வெங்கடேஷ், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன் பாபு உள்ளிட்ட, நிர்வாகிகள் பலர் உடனிருந்-தனர்.