ADDED : மே 09, 2026 03:59 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர் மாவட்ட காங்., கட்சி சார்பில், மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், த.வெ.க., தலைவர் விஜயை, ஆட்சி அமைக்க உடனடியாக அழைக்க வேண்டும், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் ஸ்டீபன் பாபு, கரூர் மாநகர தலைவர் வெங்க டேஷன், அரவக்குறிச்சி நகர தலைவர் ராஜேந்திரன், ஐ.டி., விங்க் பொறுப்பாளர் ஷாகுல்
உள்பட பலர் பங்கேற்றனர்.
