ADDED : செப் 03, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் மாவட்ட காங்., கட்சி சார்பில், மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில்,
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது போடப்பட்டு வரும், பொய்
வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும், காங்., கட்சி மற்றும் ராகுல்
உள்ளிட்ட, முக்கிய தலைவர்களை முடக்க நினைக்கும், பா.ஜ., அரசை
கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள்
முருகேசன், கோகலே, பிரபு, கண்ணப்பன், பாஜிலா பானு, லீலாவதி, சுரேஷ்
உள்பட, பலர் பங்கேற்றனர்.
