/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிரதமர் மோடி வருகையை எதிர்த்து காங்., ஆர்ப்பாட்டம்
/
பிரதமர் மோடி வருகையை எதிர்த்து காங்., ஆர்ப்பாட்டம்
பிரதமர் மோடி வருகையை எதிர்த்து காங்., ஆர்ப்பாட்டம்
பிரதமர் மோடி வருகையை எதிர்த்து காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 07, 2025 02:22 AM
கரூர்: கரூர் மாவட்ட காங்., கட்சி சார்பில், மாநில பொதுக்குழு உறுப்-பினர் கோகுல் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தமிழகத்துக்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும், தமிழக அரசு கோரிய நிதியை, மத்திய பா.ஜ., அரசு நிலுவை இல்லாமல் வழங்க வேண்டும், தமிழகத்தில் செயல்ப-டுத்தப்பட்டு வரும், மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு, மத்திய அரசு பாரபட்சம் இல்லாமல் நிதி வழங்க வேண்டும் எனவும், தமி-ழகம் வரும் பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷம் எழுப்பப்-பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாநகர காங்., தலைவர் வெங்டேஷ், துணைத்தலைவர் கண்ணையன், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன் பாபு, விவசாய அணி நிர்வாகி பாண்டியன் உள்பட, பலர் பங்கேற்-றனர்.