ADDED : ஜூலை 06, 2026 04:52 AM
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய, காங்., சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
மேற்கு
ஒன்றிய வட்டார தலைவர் கணேசன் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட முன்னாள்
எம்.எல்.ஏ., பழனிசாமி, கரூர் மாவட்ட காங்., தலைவர் ரமேஷ் ஆகியோர் கலந்து
கொண்டனர். கூட்டத்தில், காங்கிரஸ் தற்போது சரியான பாதையில் செல்கிறது.
இந்த வாய்ப்பை முதல்வர் விஜய் வழங்கியுளளார்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, மாநிலத்தில் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கொண்டு மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதை
மேம்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியை வளர்க்க நடவடிக்கை எடுக்க
வேண்டும். வரும் பஞ்சாயத்து தேர்தலில், 33 சதவீத சீட் ஓதுக்கீடு கிடைக்க
வாய்ப்பு இருப்பதால், கட்சியை வலுத்தப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற
வேண்டும் என கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பொது செயலாளர் மாணிக்கம்,
நகர தலைவர் மோகன், ஒன்றிய கவுன்சிலர் லீலாவதி, பிச்சம்பட்டி
கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
