/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மீது கார் மோதல் கான்ஸ்டபிள் காயம்
/
பைக் மீது கார் மோதல் கான்ஸ்டபிள் காயம்
ADDED : மே 23, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகில் புலியூரை சேர்ந்தவர் சிலம்பரசன், 38. இவர் கரூர் நகர போலீஸ் ஸ்டேஷனில், கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். கடந்த, 20 இரவு, 11:15 மணிக்கு பள்ளபாளையத்தில் உள்ள கோவிலில், பாதுகாப்பு முடிந்து திரும்பி உள்ளார். சின்னதாராபுரம் - கரூர் சாலை பெரியதாதம்பாளையம் அருகில், பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரில் வந்த கார் மோதிய விபத்தில் காயமடைந்தார்.
அவர், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து க.பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.