/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் சர்ச் கார்னரில் புதிய நிழற்கூடம் கட்டும் பணி
/
கரூர் சர்ச் கார்னரில் புதிய நிழற்கூடம் கட்டும் பணி
கரூர் சர்ச் கார்னரில் புதிய நிழற்கூடம் கட்டும் பணி
கரூர் சர்ச் கார்னரில் புதிய நிழற்கூடம் கட்டும் பணி
ADDED : ஆக 28, 2025 01:56 AM
கரூர், கரூரில் சேதமடைந்துள்ள, நிழற்கூடம் அகற்றப்பட்டு, புதிய நிழற்கூடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
கரூர்-சேலம் பழைய சாலை சர்ச் கார்னர் பஸ் ஸ்டாப் பகுதியில், பயணிகள் வசதிக்காக, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன், நிழற்கூடம் கட்டப்பட்டது. அதை வெங்கமேடு, வெண்ணைமலை, வாங்கப்பாளையம், காதப்பாறை, வேலாயுதம்பாளையம், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் பகுதிகளுக்கு, டவுன் பஸ்களில் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, சர்ச் கார்னரில் சேதமடைந்த நிழற்கூடம் அகற்றப்பட்டு, கரூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, புதிய நிழற்கூடம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.