/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாகனங்கள் எளிதில் செல்ல தடுப்பு சுவர் அமைக்கும் பணி
/
வாகனங்கள் எளிதில் செல்ல தடுப்பு சுவர் அமைக்கும் பணி
வாகனங்கள் எளிதில் செல்ல தடுப்பு சுவர் அமைக்கும் பணி
வாகனங்கள் எளிதில் செல்ல தடுப்பு சுவர் அமைக்கும் பணி
ADDED : ஜூலை 09, 2024 05:44 AM
கிருஷ்ணராயபுரம்: வல்லம் சாலை அருகில், வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் முதல் வல்லம் வரை சாலை உள்ளது.
மேலும் பிள்ளபாளையம் அருகில் இரண்டு கட்டளை வாய்க்கால் செல்கிறது. வாய்க்கால் நடுவில் இரண்டு பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், பாலம் வழியாக வாகனங்கள் வல்லம் பகுதிக்கு செல்லும் வகையில், தார்ச்சாலை விரிவாக்கம் செய்து அந்த பகுதியில் சாலையோர இடங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் முடிந்ததும், அந்த பகுதியில் புதிய சாலை அமைக்கப்படும். வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில், பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.