/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேட்டு மகாதானபுரத்தில் குடிநீர்குழாய் அமைக்கும் பணி
/
மேட்டு மகாதானபுரத்தில் குடிநீர்குழாய் அமைக்கும் பணி
மேட்டு மகாதானபுரத்தில் குடிநீர்குழாய் அமைக்கும் பணி
மேட்டு மகாதானபுரத்தில் குடிநீர்குழாய் அமைக்கும் பணி
ADDED : நவ 07, 2024 01:19 AM
மேட்டு மகாதானபுரத்தில்
குடிநீர்குழாய் அமைக்கும் பணி
கிருஷ்ணராயபுரம், நவ. 7-
மேட்டு மகாதானபுரம் சாலை அருகில், குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் நடந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளுக்கு, குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடக்கிறது. டவுன் பஞ்., வார்டுகளில் புதிய பைப் லைன் அமைக்கும் பணி கடந்த வாரம் நடந்தது. நேற்று காலை, மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து, தண்ணீர் கொண்டு வரும் பகுதியான மேட்டு மகாதானபுரம் சாலை அருகில், புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது. பொக்லைன் இயந்திரம் கொண்டு குழிகள் பறிக்கப்பட்டன. பின், புதிய குழாய் பொருத்தும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இப்பணிகள் முடிந்ததும், வார்டு பகுதியில் உள்ள குழாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.