நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைக்கும் பணி துவங்கியது
நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைக்கும் பணி துவங்கியது
ADDED : மே 15, 2026 05:52 AM
கிருஷ்ணராயபுரம் கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
கரூர் - திருச்சி நெடுஞ்சாலை கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப், யூனியன் அலுவலகம் அங்காள பரமேஸ்வரி கோவில் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலை மேடு பள்ளமாக மாறி இருந்தது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சாலையில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் டோல்கேட் நிர்வாகம் சார்பில், மோசமான நிலையில் உள்ள நெடுஞ்சாலையை மீண்டும் புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி கடந்த சில நாட்களாக கிருஷ்ணராயபுரம் கடைவீதி, பஸ் ஸ்டாப், யூனியன் அலுவலகம் ஆகிய பகுதிகளில் மோசமான நிலையில் இருந்த, பழைய நெடுஞ்சாலையின் தார் சாலை பொக்லைன் இயந்திரம் கொண்டு பெயர்த்து எடுக்கப்பட்டது.
தொடர்ந்து புதிய தார் சாலை அமைக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் காரணமாக, நெடுஞ்சாலை பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
