/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெரூர்-உன்னியூர் உயர்மட்ட பாலம் முடியும் தருவாயில் கட்டுமான பணி
/
நெரூர்-உன்னியூர் உயர்மட்ட பாலம் முடியும் தருவாயில் கட்டுமான பணி
நெரூர்-உன்னியூர் உயர்மட்ட பாலம் முடியும் தருவாயில் கட்டுமான பணி
நெரூர்-உன்னியூர் உயர்மட்ட பாலம் முடியும் தருவாயில் கட்டுமான பணி
ADDED : ஜூலை 27, 2025 01:10 AM
கரூர் :நெரூர் - உன்னியூர் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி முடியும் தருவாயில் இருப்பதால், விரைவில் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவிரி ஆற்றின் மேற்கு கரையில் கரூர் மாவட்டம் நெரூர், கிழக்கு கரையில் திருச்சி மாவட்டம் உன்னியூர் உள்ளது. காட்டுப்புத்துார், தொட்டியம், முசிறி பகுதிகளில் இருந்து நெரூர் செல்ல வேண்டும் என்றால், கரூர் அல்லது மோகனுார் வழியாக செல்ல வேண்டும். இதனால், 15 முதல், 20 கி.மீ., வரை சுற்றி செல்ல வேண்டியுள்ளது. நெரூர்-உன்னியூர் இடையே, காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்-பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
இதன்படி, 92.38 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பாலம் காட்டுப்புத்துார்
உன்னியூர் சாலையில் துவங்கி, கரூர் நெரூர் சாலையில் முடிவடைகிறது. பாலத்தின் நீளம், 1,092 மீட்டர், அகலம், 12.90 மீட்டர் அளவில் கட்டப்படுகிறது. இப்பாலம், 26 கண்களுடையதாய், 42 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, பாலத்தில் சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன், வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் நெரூர், உன்னியூர் பகுதி மட்டுமின்றி, கரூரிலிருந்து சென்னை செல்வோருக்கும் மிகுந்த வசதியாக இருப்பதுடன், பயண நேரமும் வெகுவாக குறையும். மேலும், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, நெரூரிலுள்ள ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் கோவிலுக்கு வந்து செல்ல வசதியாக அமையும் என, பொதுமக்கள் கூறுகின்றனர்.