தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பைக்கில் இருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழப்பு

பைக்கில் இருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழப்பு

பைக்கில் இருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழப்பு


ADDED : ஆக 22, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:பைக்கில் இருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.

குளித்தலை அடுத்த ஆர்ச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கதிரேஷ், 25. அதே பகுதியை சேர்ந்த நந்தினி, 23, என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். நந்தினி அரியாவூர் இ-சேவை மையத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கதிரேஷ் கட்டட வேலை செய்து வந்தார். கடந்த 17 காலை, 9:30 மணியளவில் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில், பாலசமுத்திரப்பட்டில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

தோகைமலை -ஆர்.டி.மலை நெடுஞ்சாலை அம்மணிப்பாறை தனியார் பள்ளி அருகேயுள்ள வளைவில், எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும் போது, எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கதிரேஷ்

உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி நந்தினி கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us