ADDED : ஜூன் 01, 2026 03:42 AM
அ நிறம் | அளவு
கரூர்:சின்னதாராபுரம் அருகே, மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, தீக்குளித்த தொழிலாளி
உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், தும்பிவாடி புரவிபாளையம்
பகுதியை சேர்ந்தவர் ரங்கன், 43, கட்டட தொழிலாளி. குடிப்பழக்கம்
உள்ளவர். இவர் கடந்த மே, 15 இரவு வீட்டில், குடி போதையில், உடலில்
மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். இதையடுத்து, பலத்த தீக்காயம் அடைந்த
ரங்கன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வந்தார். ஆனால், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, ரங்கனின் மனைவி ஜோதி. 39, போலீசில் புகார் செய்தார்.
சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
